Tamilnadu
குடும்பத்தினருக்காக முதல்வர் பதவியை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்யும் எடப்பாடி - சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்!
திருவாரூர் மாவட்டம் செல்லூரைச் சேர்ந்த கண்ணன் வேலு என்பவர் தொடர்ந்துள்ள பொது நல வழக்கில், விவசாயத்திற்காக ஆற்றிலிருந்து மேடான பகுதிகளுக்கு தண்ணீரை எடுப்பதற்காக தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டத்தின் கீழ் தமிழகத்தில் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டதாகவும், முதல்வரும், அவரது குடும்பத்தினரும் உறுப்பினர்களாக உள்ள சேலம் மாவட்டம் நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்துக்கு மட்டும், 5 குதிரைத்திறன் கொண்ட மோட்டார்களை, 15 குதிரை திறனாக மாற்ற அனுமதி அளித்து, நீர்வள ஆதாரத்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் கடந்த மார்ச் 11ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த உத்தரவு முதல்வர் பதவிக்கான நடத்தை விதிகளை மீறிய செயல் என்றும், அதிகார துஷ்பிரயோகம் என்றும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, குதிரைத்திறனை அதிகரிக்க அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் தமிழகம் முழுவதும் 48 விவசாயிகள் அளித்த விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள நிலையில், முதல்வரின் குடும்பத்தினர் உறுப்பினர்களாக உள்ள சங்கத்திற்கு மட்டும் நான்கு நாட்களில் அனுமதி அளித்தது அதிகார துஷ்பிரயோகம் என வாதிட்டார்.
இதையடுத்து மனுவுக்கு பதிலளிக்கும்படி, பொதுப்பணித்துறை செயலர் மற்றும் நீர்வள ஆதாரத்துறை தலைமைப் பொறியாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 8 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
Also Read
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!
-
”அடுத்தடுத்த அரிவாள் வெட்டு.. அச்சத்தில் மக்கள்.. தறிகெட்டுப் போன சட்டம் ஒழுங்கு” : முழு விவரம்!
-
நடிகர் அஜித்குமார் தாயார் காலமானார் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
”சறுக்கலை சந்தித்த முதல்வர் விஜயின் டெல்லி பயணம்.. செய்தியாளர்களா.. பதறிய விஜய்” : முரசொலி தலையங்கம்!
-
ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! வீரவசனம் வேண்டாம் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி