Tamilnadu
“தி.மு.க தேர்தல் அறிக்கை காரணமாக அவசர அவசரமாக நிதி ஒதுக்கிய அ.தி.மு.க அரசு” - தி.மு.க MLA குற்றச்சாட்டு!
தி.மு.க தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்ட பிறகே, காவிரி உபரி நீரை பொன்னணியாறு அணைக்கு நீரேற்றம் செய்யும் திட்ட ஆய்வுப் பணிக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகதாக தி.மு.க எம்.எல்.ஏ குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொன்னனியாறு அணை 1975ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் அப்போதைய முதல்வர் கலைஞரால் திறந்துவைக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மழை இல்லாத காரணத்தால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் பாசனமின்றி வேளாண் நிலங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் வெள்ளக்காலங்களில் காவிரியில் உபரியாகச் செல்லும் நீரை மாயனூர் கதவணையிலிருந்து பொன்னனியாறு அணைக்கு நீரேற்றம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த வாரம் திருச்சிக்கு வந்த தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினரிடம் இப்பகுதி விவசாயிகள் இத்திட்டத்தை தி.மு.க தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பொன்னணியாறு அணைக்கு காவிரி உபரி நீரை நீரேற்றம் செய்யும் திட்டப்பணி ஆய்வுக்காக தமிழக அரசு ரூபாய் 40 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளதாக கடந்த 8ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அணையைப் பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, விவசாயிகளிடம் பேசி அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்.எல்.ஏ, “தி.மு.க தேர்தல் அறிக்கையில் இத்திட்டம் சேர்க்கப்பட்ட பின்னரே தமிழக அரசு திட்ட ஆய்வுப் பணிக்கு நிதி ஒதுக்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க இதைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது தி.மு.க தேர்தல் அறிக்கையால் விழித்துக்கொண்டு இத்திட்ட ஆய்வுப்பணிக்கு நிதி ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தை இனியாவது விரைந்து நிறைவேற்ற வேண்டும். தற்போதைய ஆட்சியில் இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் போனாலும் 2021ல் அமையப்போகும் தி.மு.க ஆட்சியில் இத்திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்” என உறுதியளித்தார்.
Also Read
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!
-
“2026 முதல் தமிழ்நாட்டு வளர்ச்சியின் அடுத்த பார்ட் தொடங்கப்போகிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
கள்ளக்குறிச்சியில் 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!