Tamilnadu
“நெசவாளர்களின் நீண்ட கால கோரிக்கையான நெசவு பூங்கா தி.மு.க ஆட்சியில் துவங்கப்படும்”: திருச்சி சிவா உறுதி!
நெசவாளர்களின் துயரம் கண்டு அவர்களுக்கு முதன்முதலில் இலவச மின்சாரம் வழங்கியவர் தி.மு.க தலைவர் கலைஞர். தி.மு.க ஆட்சி வந்தவுடன் நெசவாளர்களுக்கு உற்பத்திக்கு உரிய விலை வழங்கப்படும் என ஆண்டிபட்டி நடைபெற்ற நெசவாளர்கள் கூட்டத்தில் தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் உறுப்பினர் திருச்சி சிவா கூறினார்.
தேனி தெற்கு மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில், “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” பிரச்சாரப் பயணத்தை தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா மேற்கொண்டு வருகின்றார்.
அதன்படி, தேனி மாவட்டம் நெசவாளர்கள், வணிகர்கள் சங்கம், தென்னை விவசாயிகள், நெல் விவசாயிகள், வர்த்தக சங்கங்களின் மனுகளை பெற்றுக்கொண்ட திருச்சி சிவா, அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் நெசவாளர்களுடன் கலந்துரையாடிய திருச்சி சிவா அவர்களிடையே பேசுகையில், “நெசவாளர்களின் துயரம் கண்டு முதன்முதலில் இலவச மின்சாரம் வழங்கியது தி.மு.க தலைவர் கலைஞர் தான். மேலும் தி.மு.க ஆட்சி வந்தவுடன் நெசவாளர்கள் நெய்யும் ஆடைகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், கிடப்பில் போடப்பட்டு உள்ள நீண்ட நாள் கோரிக்கையான நெசவு பூங்கா தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் துவங்கப்படும். விவசாயிகளுக்கு தி.மு.க என்றும் துணை நிற்கும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்த நெல் கொள்முதல்- விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு !
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?