Tamilnadu
ஆடம்பர விளம்பரம் செய்ய பணம் இருக்கும்; சாலை அமைக்க நிதி இருக்காதா? பிச்சையெடுத்து சேலம் மக்கள் போராட்டம்!
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சின்னேறி வயக்காடு என்ற பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும், கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் எனக் கோரி அப்பகுதியில் உள்ள மக்கள் பல மாதங்களாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை அளித்து வந்தனர்.
மேலும் போராட்டத்திலும் ஈடுபட்டதை தொடர்ந்து அங்கு வந்த மாநகராட்சி நிர்வாகத்தினர் மூன்று மாதத்தில் சாலை சீரமைத்து தரப்படும் என்று உறுதி அளித்து, ஜல்லிகளை கொட்டிச் சென்றனர். ஆனால் இதுவரை சாலையை புதுப்பிக்காமல் இருப்பதோடு சாலை அமைத்திட நிதி இல்லை என்றும் கூறியதாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அப்பகுதி மக்களோடு இணைந்து இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை அமைத்திட மாநகராட்சியிடம் நிதி இல்லாத காரணத்தினால், பிச்சை எடுத்து நிதி திரட்டி மாநகராட்சியிடம் வழங்கும் நூதன போரட்டத்தில் ஈடுபட்டு, கடை கடையாகச் சென்று திருவோடு ஏந்தி நிதி திரட்டினர்.
மேலும் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்து போராட்டத்திலும் ஈடுபட்ட அவர்கள், தங்களது சாலையை விரைந்து சீரமைக்காவிட்டால், தொடர் போராட்டத்திலும், மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர்.
தமிழக முதல்வரின் சொந்த மாவட்டத்தில் உள்ள மாநகராட்சியான சேலம் மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உள்ள மாநகராட்சியாகும். இந்த மாநகராட்சியில் சாலை அமைக்கவும், கழிவு நீர் கால்வாய் அமைத்திடவும் நிதி இல்லை என்று கூறி, அதற்காக மக்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!