Tamilnadu

“நடுவானில் இயந்திரக்கோளாறு; அவசரமாக தரையிறங்கியதால் 164 போ் உயிா் தப்பினா்”: சென்னையில் பெரும் பரபரப்பு!

கத்தாா் நாட்டு தலைநகா் தோகாவிலிருந்து இலங்கைக்கு ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. விமானத்தில் 158 பயணிகள், 6 விமான ஊழியா்கள் உட்பட 164 போ் இருந்தனா்.

இந்நிலையில், அந்த விமானம் நேற்று இரவு 7.30 மணியளவில் சென்னை வான்வெளியை கடந்து நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, விமானத்தில் திடீரென இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. இதை கண்டுப்பிடித்த விமானி அவசரமாக எதாவது ஒரு விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்தாா்.

அப்போது சென்னை விமானநிலையம் தான் பாதுகாப்பானது என்பது தெரிந்தது. இதையடுத்து உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொண்டு அனுமதி கேட்டாா். சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உடனடியாக சென்னை விமான நிலையத்திற்கு அவசரமாக தகவல் கொடுத்து, விமானம் அவசர தரையிறக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டனா்.

இதையடுத்து ஓடுபாதை அருகே தீயணைப்பு வண்டிகள், மருத்துவ குழுவினா், அதிரடிப்படையினா், பாதுகாப்பு அதிகாரிகள் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டனா். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்த பின்பு விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது.

இதையடுத்து விமானம் சென்னையில் பத்திரமாக தரையிறங்கியது. அதுவரை பதட்டத்தோடு நின்ற பாதுகாப்பு அதிகாரிகள் நிம்மதியடைந்தனா். உடனடியாக பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, சா்வதேச விமானநிலைய பயணிகள் ஓய்வு கூடத்தில் தங்க வைக்கப்பட்டனா். விமான பொறியாளா்கள் விமானத்தை பழுதுபாா்க்கும் பணியில் ஈடுப்பட்டனா். ஆனால் உடனடியாக சரி செய்ய முடியவில்லை.

இதையடுத்து இலங்கையிலிருந்து வரவிருக்கும் மாற்று விமானத்தில் பயணிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக்கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுப்பிடித்து எடுத்த துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டு, நல்வாய்ப்பாக 164 போ் உயிா் தப்பினா். இந்த சம்பவம் சென்னை விமானநிலையத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: OBC பிரிவினருக்கான வருமான உச்ச வரம்பை உயர்த்தாமல் இழுத்தடிக்கும் மத்திய அரசு - டி.ஆர்.பாலு கடிதம்!