Tamilnadu
“சுடுகாட்டுக்குப் பாதையில்லை” : ஆரணி அருகே இறந்தவரின் உடலை மார்பளவு தண்ணீரில் எடுத்துச்சென்ற அவலம்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கமண்டலபுரம் கிராமத்தில், சேட்டு (80) என்பவர் நேற்று உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக இன்று சுடுகாட்டுக்கு கொண்டு செல்லும் பொழுது ஆற்றில் மார்பு அளவு தண்ணீரில் இறங்கி சடலத்தை கொண்டு சென்றனர்.
மேலும் கடந்த வாரம் கரையை கடந்த நிவர் புயல் காரணமாக ஜவ்வாது மலை காட்டாறு பகுதியில் அதிக அளவு மழை பெய்து செண்பகத்தோப்பு அணையில் சுமார் 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.
செண்பகத்தோப்பு அணை திறந்ததால் கமண்டல நீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது இதனால் கமண்டலபுரம் கிராமத்தில் இன்று சேட்டு என்பவர் உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் ஆற்றில் மார்பு அளவு நீரில் இறங்கி மிதங்கிய படி சடலத்தை கொண்டு சென்றனர்.
ஆகையால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கமண்டல நதியில் கடந்து படவேடு செல்ல தரைப்பாலம் அல்லது மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் இதுவரை யாரும் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது கிராம மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
மேலும் கமண்டலபுரத்தில் இது போன்று ஆற்றில் வெள்ளம் வரும் பொழுது யாராவது உயிரிழந்தால் ஆற்றில் இறங்கி உயிரை பணையம் வைத்து, அவர்களது சடலத்தை கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது என்று அந்த கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு... : சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இடம்பெற்ற 10 முக்கிய அம்சங்கள்!
-
“11.9% பொருளாதார வளர்ச்சி” : பேரவையில் அ.தி.மு.க.வுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தரணி முழுமைக்கும் முரசொலிம் இடைக்கால பட்ஜெட்” : கி.வீரமணி வரவேற்பு!
-
இனி டிமாண்டி சாலை, “எம்.எஸ். விஸ்வநாதன் சாலை” என்று அழைக்கப்படும்! - புதிய பெயர் பலகை திறப்பு!
-
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள் வெளியீடு! : முழு விவரம் உள்ளே!