Tamilnadu

பாதிக்கப்பட்ட பெண் மீதே நடவடிக்கை எடுத்த கட்சி.. பா.ஜ.க நிர்வாகி மீது எஸ்.பி அலுவலகத்தில் பாலியல் புகார்!

பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் அதிகம் ஈடுபடுவதே பா.ஜ.கவினர்தான் எனவும் கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் கூட, உத்தர பிரதேசம் உனா பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு, டெல்லியில் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது மருமகளே புகாரளித்த சம்பவம் என பா.ஜ.க-வினர் மீதே பல பாலியல் புகார்கள் குவிந்து கிடக்கின்றன.

இந்நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் காயத்திரி. இவர் பா.ஜ.கவின் மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளராக உள்ளார். இவர், தனக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் பதவி வழங்குவதாக கூறி கலிவரதன் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பா.ஜ.க மாநில தலைவருக்கு எழுதிய கடிதம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்து பா.ஜ.க நீக்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த காயத்திரி, பா.ஜ.க மாவட்டச் செயலாளர் வி.ஏ.டி.கலிவரதன் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் என நேற்று விழுப்புரம் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளித்தார்.

அந்த புகார் கடித்ததில், “விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க தலைவராக இருக்கும் வி.ஏ.டி.கலிவரதன், எனக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிரணி தலைவர் பதவி வாங்கித் தருவதாக கூறி ரூ.5 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, முடக்குவாத சிகிச்சைக்காக சென்னை செல்லவிருந்த என்னை நான் நல்ல சிகிச்சைக்கு சென்னைக்கு அழைத்துச் செல்கிறேன் எனக் கூறி, என்னைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் வீடியோ எடுத்து என் ஆசைக்கு இணங்கவில்லை என்றால், அனைவருக்கும் அனுப்பிவிடுவதாகவும் மிரட்டினார்.

இரண்டு நாட்களாக அடைத்து வைத்து பல முறை பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும், அதுமட்டுமல்லாது என்னைப் பற்றி வெளியே யாரிடமாவது கூறினால் “உன்னை தீர்த்துக்கட்டிவிடுவேன்” என்று கொலை மிரட்டலும் விடுகிறார்” என்று புகார் தெரிவித்துள்ளார்.

Also Read: “சொந்த கட்சி பெண்களுக்கே பாலியல் தொல்லை”: பா.ஜ.க மாவட்ட தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார் !