Tamilnadu
“நிவர் புயலால் வேரோடு சாய்ந்த 60 ஆண்டுகள் பழமையான மரம்” : மீண்டும் நட்டு வைத்த பள்ளி முன்னாள் மாணவர்கள்!
புயலாக அச்சுறுத்திய நிவர் புயல் கடந்த 25ம் தேதி, புதுச்சேரி மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. இப்புயலால் புதுச்சேரி நகரப் பகுதியில் பலங்கால மரங்கள் பல வேரோடு சாய்ந்தன.
அதில், குறிப்பாக 60 ஆண்டுக்கு மேல் வளர்ந்த ஆலமரம் ஒன்றும் புயலால் வோரோடு சாய்ந்துள்ளது.இந்த ஆலமரமானது, புதுச்சேரி அரியாங்குப்பம் மனவெளி தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 60 ஆண்டுகளுக்கு மேல் இருந்துள்ளது.
இந்த நிலையில், 60 ஆண்டுகள் பழமையான மரம் சாய்ந்ததை பற்றிக் கேள்விபட்ட அப்பள்ளியில் படித்த முன்னாள் மானவர்களுக்கு வாட்ஸ்அப் குழு மூலம் ஒருவருக்கு ஒருவர் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்து பார்த்து அவர்கள் சோகமடைந்தனர்.
பின்னர் அவர்கள் ஒன்று சேர்ந்து அதன் கிளைகளை சரி செய்து அதே இடத்தில் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன், வனத்துறை ஆலோசனைபடி நிமிர்த்தி நட்டனர். இதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள். இப்பள்ளியில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி பயின்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
"புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KKSSR உறுதி!
-
அதானியை காப்பாற்ற 35 ஆயிரம் கோடி LIC நிதியை வழங்கிய ஒன்றிய பாஜக அரசு... அம்பலப்படுத்திய பிரபல நாளிதழ் !
-
“காஷ்மீர் மக்களை பழிவாங்குவது ஏன்? - அமித்ஷா சொல்வது ‘இரட்டை’ நாக்கு வாக்குமூலம்” : முரசொலி விமர்சனம்!
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!