Tamilnadu
டெல்லி செல்லும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும் தாக்குதல் !
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகள் மீது பா.ஜ.க ஆளும் ஹரியானா அரசு கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் போராட்டத்தை கலைக்க முயற்சி!
நாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி மத்திய மோடி அரசாங்கம் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள வேளாண் சட்டம் இந்திய விவசாயத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக இருப்பதாகவும், அந்த சட்டங்களை நிறைவேற்ற வேண்டாம் என பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள பஞ்சாப் விவசாயிகளால் அம்மாநிலமே போராட்டக்களமாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாது, பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்கே களத்தில் இறங்கி போராடி வருகிறார்.
இந்நிலையில், `டெல்லி சலோ’ என்ற பெயரில் பஞ்சாப், அரியானா விவசாயிகள் டெல்லி நோக்கி நவம்பர் 26, 27 தேதிகளில், பேரணியாக சென்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
ஆனால், இதற்கு பாஜ ஆளும் அரியானா மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை. அதனால், போராட்டத்தை தடுக்கும் வகையில், ஹரியானவில் தற்போது பல இடங்களில் தடுப்புக்கள் அமைக்கட்டுள்ளனர். இருப்பினும், திட்டமிட்டப்படி நேற்று காலை முதல், ஏராளமான பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் பேரணியாக புறப்பட்டனர்.
அவர்கள் அரியானா மாநிலத்தின் ஷம்பூ பகுதியில் நுழைந்ததும், இம் மாநில போலிஸார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை மீறி முன்னேறிய விவசாயிகள் மீது போலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் விரட்டினர். விவசாயிகளும் போலிஸார் மீது கற்களை வீசி தாக்கினர்.
விவசாயிகளின் போராட்டத்தை கலைக்கும் அரியானா அரசின் முயற்சிக்கு காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!
-
“2026 முதல் தமிழ்நாட்டு வளர்ச்சியின் அடுத்த பார்ட் தொடங்கப்போகிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
கள்ளக்குறிச்சியில் 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!