Tamilnadu
தமிழகத்தில் இன்று 1,464 பேருக்கு கொரோனா தொற்று : இதுவரை 7,76,174 பேர் பாதிப்பு! #Covid19
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,464 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,76,174 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 60,365 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,15,13,892 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக இன்று சென்னையில் 396 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,13,801 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 158 பேருக்கும், சேலத்தில் 93 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று கொரோனா குணமடைந்து 1,797 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 7,53,332 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் 11,173 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று தனியார் மருத்துவமனைகளில் 6 பேர், அரசு மருத்துவமனைகளில் 8 பேர் என 14 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 11,669 ஆக அதிகரித்துள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!