Tamilnadu
உ.பி-யில் ‘லவ் ஜிஹாத்’ சட்டத்தைத் தொடர்ந்து விமான நிலையத்திற்கு ராமன் பெயர் வைக்க யோகி அமைச்சரவை முடிவு!
பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் அம்மாநில அரசு, தொடர்ந்து சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.
சமீபத்தில் கூட சிறுபான்மையின மக்கள் மீது வெறுப்புனர்வை ஏற்படுத்தும் வகையில், அவர்களின் சமூக மக்களுக்கு எதிரான அவச சட்டம் ஒன்றை அம்மாநில அரசு நிறைவேற்றியுள்ளது.
அதாவது, லவ் ஜிஹாத்தை குற்றமாக்கி புதிய அவசர சட்டத்தை அம்மாநில அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தின்படி, விருப்பத்துடன் மதம் மாறுவதாக இருந்தால் 2 மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளது.
இந்நிலையில் அனைத்து சமூக மக்களும் பயன்படுத்தும் போக்குவரத்துதுறையின் பெயரை ஒரு மதம் சார்ந்து மாற்றும் முயற்சியில் தற்போது ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் பெயரை “மரியாதா புருஷோத்தம் ஸ்ரீராம்” என பெயர் மாற்ற அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' அயோத்தியில் உள்ள விமான நிலையத்தின் பெயரை மரியாதா புருஷோத்தம் ஸ்ரீராம் என மாற்றும் முடிவை அமைச்சரவை எடுத்துள்ளது.
இதற்காக உத்தர பிரதேச சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். யோகி அரசின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
BB வீட்டிற்குள் Rank Task : சிறைக்கு செல்லும் FJ, பாரு மற்றும் திவாகர் : பாரபட்சம் பார்க்கும் கனி!
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR): Online மூலம் படிவங்களை பூர்த்தி செய்வது எப்படி? -விவரம்
-
“முதலில் அன்புமணி இதனை தெரிந்துகொள்ள வேண்டும்...” - அவதூறுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!
-
நெல்லையில் பிக்பாஸ் பிரபலம் நடிகர் தினேஷ் கைதா?: “இது எல்லாம் ஒரு நடிகரால்தான்” - அவரே சொன்ன விளக்கம்!
-
பல கோடி ரூபாய் மோசடி : பாஜக கூட்டணி கட்சி தலைவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு !