Tamilnadu

2 நாட்களுக்கு பிறகு பெரம்பலூரில் புதிதாக ஒருவருக்கு கொரோனா... தமிழகத்தில் மேலும் 1,534 பேருக்கு பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 74 ஆயிரத்து 710 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய (நவ.,25) நிலவரப்படி 1,534 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியிருக்கிறது.

புதிதாக 67 ஆயிரத்து 458 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 914 ஆண்களுக்கும், 619 பெண்களுக்கும் 1 திருநங்கைக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதில் சென்னையில் 467, கோவையில் 149, திருவள்ளூரில் 89, திருப்பூரில் 77, செங்கல்பட்டில் 76, ஈரோட்டில் 72, காஞ்சியில் 63, சேலத்தில் 61 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளது. அதிலும் கடந்த 2 நாட்களாக புதிய தொற்றாளர்கள் இல்லாத பெரம்பலூரில் இன்று ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கொரோனா பாதிப்பால் மேலும் 16 பேர் உயிரிழந்தால் மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 655 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் மேலும் 1,873 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதனால் மொத்தமாக 7 லட்சத்து 51 ஆயிரத்து 535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்திருக்கிறார்கள். ஆகவே தற்போது 11 ஆயிரத்து 520 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Also Read: இந்தியாவில் மூன்றே நாளில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு - கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92 லட்சத்தை தாண்டியது!