Tamilnadu
தமிழகத்தில் மேலும் 1,624 பேருக்கு கொரோனா.. 17 பேர் பலி.. மொத்த பாதிப்பு 7.71 லட்சமாக உயர்வு! #CovidUpates
புதிதாக 64 ஆயிரத்து 377 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஆண்கள் 958 பேருக்கும் பெண்கள் 666 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் சென்னையில் 483 பேருக்கும், கோவையில் 140, செங்கல்பட்டில் 99, திருவள்ளூரில் 79, சேலத்தில் 77 ஈரோடு, காஞ்சிபுரத்தில் தலா 72, திருப்பூரில் 67, என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து மொத்தமாக மாநிலத்தில் கொரோனாவால் இதுகாறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.71 லட்சத்து 619 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 17 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 622 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,904 பேர் டிஸ்சார்ஜ் ஆனதை அடுத்து மொத்தமாக குணமடந்தோரின் எண்ணிக்கை 7.47 லட்சத்து 752 ஆக உள்ளது. ஆகவே தற்போது 12 ஆயிரத்து 245 பேருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !