Tamilnadu

“பிரியாணி, பணம் வேணும்னா போலிஸ்ல பேர் கொடுங்க” - வேல் யாத்திரைக்கு பலவந்தமாக ஆள் திரட்டும் பா.ஜ.க!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தின்போது பா.ஜ.க தொண்டர்களால் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அப்போது பிரியாணி கடைகளில் இருந்து பிரியாணி அண்டா திருடப்பட்ட செய்தி கடும் கேலி கிண்டலை சந்தித்தது.

இப்படி, பா.ஜ.க-வுக்கும் பிரியாணிக்கும் இடையேயான தொடர்பு பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. தற்போது வேல் யாத்திரைக்கு ஆள் சேர்ப்பதிலும் பிரியாணி பொட்டலம் முக்கிய பாத்திரம் வகித்துள்ளது.

திருவண்ணாமலை நகரில் வேல்யாத்திரை நவம்பர் 17ஆம் தேதி மாலை 4 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தொண்டர்களே இல்லாத கட்சிக்கு கூட்டம் திரட்டுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் செய்து வந்துள்ளனர்.

பல்வேறு கிராமங்களில் இருந்து வயதானவர்களிடம் பேசி, ஒவ்வொருவருக்கும் 300 ரூபாய் பணம், பிரியாணி, புடவை ஆகியவை தருவோம் என ஆசைகாட்டி ஏமாற்றி அழைத்து வந்துள்ளனர்.

வேல் யாத்திரை கூட்டம் முடிந்ததும் போலிஸ் கைது செய்ய முயல்கையில், ‘கூட்டத்துல கலந்துக்கிட்டா பிரியாணி, பணம் வாங்கித் தருவோம்னாங்க.. அதனாலதான் வந்தோம்’ என கெஞ்சியுள்ளனர். இதைக் கேட்ட போலிஸார் திகைத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பா.ஜ.க நிர்வாகிகள், கைதானவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் கட்சிக்கு அவமானம் எனக் கருதி, “கைதானால் தான் பணம், பிரியாணி தருவாங்க” எனக் கூறி வயதானவர்களை பேருந்துகளில் ஏற்றி வைத்துள்ளனர்.

கைதானவர்களை திருமண மண்டபங்கள், மடங்கள் என அடைத்து வைத்து கைதானவர்களின் விவரங்களை போலிஸார் பெற்றனர். போலிஸாரிடம் பெயர் கொடுத்தவர்களுக்கே பிரியாணி தரப்படும் என பா.ஜ.க நிர்வாகிகள் அப்போதும் வயதானவர்களை மிரட்டி வதைத்துள்ளனர். கைதான பலரும், “பிரியாணிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு வந்ததுக்கு நமக்கு இது தேவைதான்” என நொந்தபடியே சென்றுள்ளனர்.

Also Read: வரலாற்றில் முதன்முறையாக பொருளாதார மந்தநிலைக்குச் செல்லும் இந்தியா : RBI கட்டுரை - பா.ஜ.க அரசின் சாதனை!?