Tamilnadu
பட்டாசு வெடிக்க தடை: ரூ.1000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம்.. கலக்கத்தில் சிவகாசி தொழிலாளர்கள்!
நாடுமுழுவதும் காற்றுமாசு பாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மக்களின் பொருளாதார சூழல் காரணமாக இந்தாண்டு தீபாவளி பண்டிக்கை வழக்கைத்தைவிட கலையிழந்தது.
அதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளில் இந்த ஆண்டு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளதாக பட்டாசு தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் சிவகாசியில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக 2,300 கோடி ரூபாய் அளவிலான பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவற்றில், 90 சதவீதம் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்ட நிலையில், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதன் காரணமாக வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட பட்டாசுகளில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 45 சதவீத பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், வெளிமாநிலங்களில் பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளதால் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு உற்பத்தி பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!