Tamilnadu
இன்னும் 3 மாதங்களே... அதிமுக அரசால் நீக்கப்பட்டது தி.மு.க ஆட்சியில் சேர்க்கப்படும் - ஆர்.எஸ்.பாரதி உறுதி!
புதுச்சேரியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் துவக்க விழா காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. பேசுகையில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பெயரில் சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்ததற்கு புதுச்சேரி அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். கலைஞருக்கும், புதுச்சேரிக்கும் நல்ல தொடர்பு உண்டு. அவரது அரசியல் வாழ்க்கையே புதுவையில்தான் தொடங்கியது.
குறிப்பாக, கலைஞர் மறைந்த உடனே, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உடனடியாக அமைச்சரவையை கூட்டி, கலைஞருக்கு சிலை, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் இருக்கை, புதுச்சேரி மாநகரின் சாலை ஒன்றுக்கு கலைஞர் பெயர் என்று முதன் முதலில் அறிவித்தார். அவருக்கு இந்நேரத்தில் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.கவினர், எப்போதும் உறவுக்கும் கை கொடுப்போம், உரிமைக்கும் குரல் கொடுப்போம் என்று ஆர்.எஸ்.பாரதி இந்நிகழ்வின் போது பேசினார்.
மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் இங்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.கவினர் வலிய பிரச்சினைக்கு போகமாட்டோம். வந்த பிரச்சினையை விடமாட்டோம். விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கவுள்ளது.
தமிழகத்தில் மாணவச் செல்வங்களுக்கு, வாரத்திற்கு 5 முட்டைகளை வழங்கியது கலைஞர் ஆட்சியில்தான். ஆகவே தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அங்கும் புதுச்சேரி போன்று காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்படும். தமிழகத்தில் தற்போது, தி.மு.க தலைவர் ஆட்சி நடத்துகிறாரா அல்லது எடப்பாடி நடத்துகிறாரா? ஏனெனில் தி.மு.க தலைவர் கூறும் அறிவுரைகளே பின்னர் தமிழக அரசின் நடவடிக்கைகளாக உள்ளது.
மேலும், மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில், அருந்ததி ராயின் புத்தகம் நீக்கப்பட்டது குறித்து சர்ச்சை நடக்கின்றது. இந்த ஆட்சியாளர்கள், திருவள்ளூவர் பெயரை கூட எடுத்துவிடுவார்கள். வரலாற்றுப் பாடத்தை எடுக்க முடிவு செய்தார்கள். வரலாற்றில் இடம்பெற்ற தலைவர்களை எடுப்பார்கள். இவையெல்லாம் இடைக்காலத்தில் செய்வது. இன்னும் மூன்று மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும். அ.தி.மு.க ஆட்சியாளர்கள், எடுத்த அனைத்தையும் மீண்டும் கொண்டு வருவோம் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!