Tamilnadu
“ஒட்டகப் பாலில் டீ கேட்டு ரகளை” : புதுச்சேரியில் பேக்கரியை சூறையாடி ஊழியர்களை தாக்கிய இளைஞர்கள் கைது!
புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ம.தி.மு.க பிரமுகர் செல்வராஜ். இவரது மருமகன் நாராயணன். இவர் அரியாங்குப்பம் பைபாஸ் பகுதியில் பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு நேற்று இரவு வந்த 3 பேர் கும்பல், ஒட்டகப் பாலில் மில்க் ஷேக் கேட்டுள்ளனர். ஒட்டகப் பால் இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஏன் இல்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த 3 பேரும் திடீரென ஆத்திரமடைந்து கடையைச் சூறையாடினர்.
அப்போது அவர்களை தடுக்க முயன்ற ஊழியர்களையும் தாக்கினர். பதிலுக்கு கடை ஊழியர்கள் தாக்க முயன்றபோது 3 பேரும் தப்பிச்சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் நாராயணன் புகார் அளித்தார்.
இதன் பேரில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வேல்ராம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோகுல், உதயா, முருகவேல் ஆகியோர் கஞ்சா போதையில் கடையை சூறையாடி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து முருங்கப்பாக்கம் பகுதியில் இருந்த 3 பேரையும் அரியாங்குப்பம் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலுக் கடையை சூறையாடும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Also Read
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!
-
தமிழ்நாட்டிற்கான ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்திருக்கும் பாஜக அரசு! : RTI மூலம் வெளியான உண்மை!
-
அருப்புக்கோட்டையில் அரசு அலுவலகங்களை ஆட்டிப்படைக்கும் த.வெ.க.வினர்! : கடும் அதிருப்தியில் மக்கள்!
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!