Tamilnadu

நவ. 16 முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கலாம் : நவ.10 முதல் திரையரங்குகளுக்கு அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. கொரோனா பரவல் தொடரும் நிலையில், வாழ்வாதாரம் கருதி அவ்வப்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 30-ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் 30 வரையான ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் வருமாறு :

* பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும், பணியாளர் விடுதிகளும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

* பள்ளிகளில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் நவம்பர் 16-ம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

* 50% இருக்கைகளுடன் திரையரங்குகள், வணிக வளாகங்கள் - மல்டிபிளக்ஸ் வளாகங்களில் உள்ள திரையரங்குகளை வரும் 10 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.

* கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு நவம்பர் 2-ம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

* காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் நவம்பர் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி.

* வழிகாட்டு நெறிமுறைகளுடன் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இயங்க அரசு அனுமதி.

* சமூக - அரசியல் கூட்டங்கள், கலாச்சார - மதம் சார்ந்த கூட்டங்களில் வரும் நவம்பர் 16 முதல் 100 நபர்கள் வரை பங்கேற்க அனுமதி!

* சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளில் 150 பேர் வரை பங்கேற்க அனுமதி.

* நீச்சல் குளங்கள், கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள் அறிவிப்பு வரும் வரை திறக்கப்படாது.

Also Read: நவம்பர் 26 முதல் பொறியியல் செமஸ்டர் தேர்வு: 60 மதிப்பெண்களுக்கு நடைபெறும்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!