Tamilnadu
நெல்லை உட்பட 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.. அடுத்த 2 நாட்களின் தமிழக வானிலை நிலவரம்!
தமிழகக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விரகனுர் அணை (மதுரை), மதுரை _ISRO (மதுரை) தலா 10செ.மீ, மதுரை விமானநிலையம் (மதுரை) 8 செ.மீ, திருமங்கலம் (மதுரை), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), வத்திராயிருப்பு (விருதுநகர்), மதுரை தெற்கு (மதுரை) தலா 7 செ.மீ, விளாத்திகுளம் (தூத்துக்குடி), கோவில்பட்டி (தூத்துக்குடி) தலா 5 செ.மீ, கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), சாத்தூர் (விருதுநகர்) தலா 4 செ.மீ, பிளவக்கல் (விருதுநகர்), சோழவந்தான் (மதுரை), எட்டயபுரம் (தூத்துக்குடி), சித்தாம்பட்டி (மதுரை ) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Also Read
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
இம்மானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி : விஜய்யின் முகத்திரையைக் கிழித்த முரசொலி!