Tamilnadu
மதுரையில் உள்ள தேவர் சிலை, மருது சகோதரர்கள் சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.
தி.மு.க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தெப்பக்குளம் பகுதியில், முத்தமிழறிஞர் கலைஞரால் நிறுவப்பட்ட மருது சகோதரர்கள் சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, மாநகர் பொறுப்பாளர் கோ தளபதி மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் வ.பி.மூர்த்தி எம்எ.ல்.ஏ, தெற்கு மாவட்ட செயலாளர் மு. மணிமாறன், முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், மாநகர பொறுப்புக் குழு உறுப்பினர் வேலுச்சாமி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் மேயர் குழந்தைவேலு, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர்,சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூசைக்கு செல்லும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு செல்லும் வழியில், சிவகங்கை மாவட்ட எல்கையான திருப்புவனத்தில், மாவட்ட செயலாளர் கே.ஆர் பெரியகருப்பன் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் முன்னிலையில் ஏராளமான தி.மு.கவினர் திரண்டு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
அதேப்போல், ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் எல்லையில் மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ முருகவேல் ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி உள்ளிட்ட ஏராளமானோர் வரவேற்பு அளித்தனர்.
Also Read
-
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - தமிழக வேட்பாளருக்கு திமுகவின் ஆதரவைக்கேட்பது நகைப்புக்குரியது: முரசொலி!
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?