Tamilnadu
லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த கொள்ளையன் முருகன் உடல்நலக் குறைவால் மரணம்!
திருச்சியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி சத்திரம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பிரபல நகைகடை லலிதா ஜுவல்லரியில் ரூபாய் 13 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளை போனது.
இந்த சம்பவத்தில், திருவாரூரைச் சேர்ந்த முருகன், அவரது அக்கா மகன் சுரேஷ், கணேசன் ஆகியோர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரிய வந்தது. இதே கும்பல் திருச்சி சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் கொள்ளையடித்தது தெரிய வர திருச்சி தனிப்படை காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடினர்.
சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும், முருகன் பெங்களூரூ நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். இவர்களிடமிருந்து கிலோ கணக்கில் நகைகள் மீட்கப்பட்டன. பின்னர், முருகன் பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பெங்களுரூ, சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான்.
மருத்துவர்கள் அவருக்கு ஒருமாத காலம் அவகாசம் கொடுத்திருந்தனர். அவருடைய இடது கை, கால் வாதநோயால் செயல்படாமல் போய்விட்டது. வாய்பேச முடியாத நிலையில் எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களுடன் போராடி வந்த முருகன் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 11 மணி அளவில் இறந்து விட்டார்.
இதனைத்தொடர்ந்து இன்று மாஜிஸ்திரேட் விசாரணைக்கு பிறகு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு முருகனின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பெங்களூர் போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். இறந்த முருகன் மீது சென்னையில் 12 வழக்குகளும், கர்நாடகாவில் 46 வழக்குகளும், ஆந்திராவில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத் தக்கது.
Also Read
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!