Tamilnadu
மதுரை, தேனி உட்பட 15 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), திருமயம் (புதுக்கோட்டை) தலா 5 செமீ, உசிலம்பட்டி (மதுரை), ஒரத்தநாடு (தஞ்சாவூர்) தலா 4, ஆலங்குடி (புதுக்கோட்டை) 3 செமீ, மதுரை விமான நிலையம், முத்துப்பேட்டை (திருவாரூர்), சிவகிரி (தென்காசி), தளி (கிருஷ்ணகிரி), ஜெயன்கொண்டம் (அரியலூர்) தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
Also Read
-
”3 ஃபைலை திறந்து பாருங்கள்.. உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“மடைமாற்றும் அரசு.. அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் : அன்பில் மகேஸ் அதிரடி!
-
“தவெக அரசால் பரந்தூர் விமான நிலையத்திட்டம் ரத்து.. தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்”: டி.ஆர்.பி.ராஜா காட்டம்!
-
“பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” : உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
ஒரு திட்டம் நாட்டிற்காக வரும்போது, அரசியல் செய்யக்கூடாது : விஜய் அறிவிப்புக்கு தங்கம் தென்னரசு எதிர்ப்பு!