Tamilnadu

தமிழகத்துக்கு நீட் வேண்டாம் என்பதற்கு ஓர் உதாரணம்.. ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்!

நெல்லையைச் சேர்ந்த அப்பாவு ரத்தினம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ் வழியில் படித்து மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் அளித்துள்ள விளக்கத்தில், 2015-16ல் தமிழ் வழியில் படித்த 456 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 54 பேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர்.

2016-17ல் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் 438 அரசு கல்லூரிகளிலும் 99 பேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்ந்திருக்கிறார்கள். அதனையடுத்து, 2017-18ல் 40 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 12 பேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்ந்திருக்கிறார்கள்.

Also Read: “நீட் தேர்வை எதிர்க்க 3 அடிப்படை காரணிகள் இதுதான்” - மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி வில்சன் விளக்கம்!

2018-19ல் 88 பேர் அரசுக் கல்லூரிகளும், 18 பேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு 2015-16 மற்றும் 16-17ம் ஆண்டுகளில் தமிழ் வழியில் படித்த 1047 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்.

நீட் வந்த பிறகு 2017-18 மற்றும் 18-19ம் ஆண்டுகளில் மொத்தம் 158 மாணவர்களே தமிழ் வழியில் படித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இதன் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை 8 மடங்கு வரை சரிந்திருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: “நீட்’க்கு வக்காலத்து வாங்குவதை விடுத்து அதன் கசப்பான உண்மையை அறிவீர்களாக” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!