Tamilnadu

‘அறிவுப் பயிர் வளர்த்த அறிவாலயச் சூரியன்’ நூலை வெளியிட்டார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் !

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் அணவயல் கணேசன் எழுதிய ‘அறிவுப் பயிர் வளர்த்த அறிவாலயச் சூரியன்’ என்ற நூலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கழக அலுவலகத்தில், தலைமைக் கழகச் சொற்பொழிவாளரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளருமான அணவயல் கணேசன் அவர்கள் எழுதிய “அறிவுப் பயிர் வளர்த்த அறிவாலயச் சூரியன்” என்ற நூலினை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் முதல் பிரதியினை டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் கே.லெட்சுமணன் பெற்றுக் கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பிறந்தாலும், ஆசிரியப் பணி புரிந்த அணவயலையே தனது அடையாளமாக ஏற்கும் அளவுக்கு கல்விப் பணியை நேசித்ததுடன், கழகப் பணியையும் - கல்விப் பணியையும் தனது இரு கண்களாகவே கருதிய இந்நூலாசிரியர் வலுவான விழுதாய்த் தமிழகத்தைத் தாங்குகிற கலைஞரின் புதல்வரை முதல்வராகவே கருதும் தமிழக மக்களின் எண்ணம் அறிந்து இந்நூலை தொகுத்திருக்கிறார்.

முத்தமிழறிஞர் கலைஞர், கழகத் தலைவர் தளபதி ஆகியோர் குறித்து, ‘‘காவியத்தலைவர் கலைஞர் புகழ் வணக்கம்’’, ‘‘மயக்கமும் மர்மமும்”, காவேரி பிரச்சினை குறித்து கலைஞர் அவர்கள் முரசொலியில் எழுதிய கடித தொகுப்பு நூல், “ஏன் வேண்டும் திராவிட இயக்க சிந்தனைகள்” போன்ற இந்நூலாசிரியர் அணவயல் கணேசன் அவர்கள் ஏற்கனவே பல்வேறு நூல்களை படைத்துள்ளார் இவர்.

இந்நிகழ்வின்போது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, எம்.எல்.ஏ., செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., நூலாசிரியர் அணவயல் கணேசன், கவிதா பதிப்பகம் சேது.சொக்கலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

Also Read: “பதவி சுகத்துக்காக மத்திய அரசிடம் மாநிலங்களின் உரிமையை அடகு வைத்த அடிமைக் கூட்டம்” - மு.க.ஸ்டாலின் சாடல்!