Tamilnadu
அடுத்த 2 நாட்களுக்கு சென்னை உட்பட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை தகவல்
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம் மற்றும் பெரம்பலூரிலும், அடுத்த 48 மணி நேரத்தில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
அக்.,19 ம் தேதி மத்திய வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக அக்டோபர் 18 அந்தமானில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 19 மத்திய கிழக்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அதே போல, அக்டோபர் 20ல் மத்திய மேற்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடல், வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேலும், அக்டோபர் 21 ஆந்திர கடலோர பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் உயர்அலை முன்னறிவிப்பு
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 18.10.2020 இரவு 11:30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 2.0 முதல் 3.4 மீட்டர்வரை எழும்பக்கூடும்.
Also Read
- 
	    
	      
“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
 - 
	    
	      
”பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” : Chennai Press Club கண்டனம்!
 - 
	    
	      
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக 2 பேர் நியமனம் : கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
 - 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
 - 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!