Tamilnadu
மெரினாவில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது? -தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மீனவர் நலன் அமைப்பின் பீட்டர் ராயன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில் மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பது மற்றும் லூப் சாலையில் உள்ள மீன் அங்காடியை முறைப்படுத்துவது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு துறைகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனரா என கேள்வி எழுப்பினர்.
பொதுமக்களை இன்னும் அனுமதிக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், அந்த விவகாரத்தில் நீதிமன்றம் அழுத்தம் தர முடியாது என்றும், அதேசமயம் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசும், சென்னை மாநகராட்சியும் என்ன முடிவு எடுத்துள்ளது என்பதை அக்டோபர் 5ஆம் தேதி தெரிவிக்க உத்தரவிட்டுள்ளனர்.
மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை வைக்க உரிமம் வழங்குவது குறித்த டெண்டர் பணிகள் எந்த அளவில் இருக்கிறது என்பதையும் அறிக்கையாக தாக்கல் செய்யயும் உத்தரவிட்டுள்ளனர்.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!