Tamilnadu
தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.. வானிலை மையம் தகவல்!
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு (7.6 கிலோ மீட்டர் உயரம்) சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எஞ்சிய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி (28.09.2020) நேரத்தில் சேலம்,கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும்; கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
செப்டம்பர் 29 மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 29 & செப்டம்பர் 30 மத்திய கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் சூறாவளி காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
”3 ஃபைலை திறந்து பாருங்கள்.. உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“மடைமாற்றும் அரசு.. அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் : அன்பில் மகேஸ் அதிரடி!
-
“தவெக அரசால் பரந்தூர் விமான நிலையத்திட்டம் ரத்து.. தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்”: டி.ஆர்.பி.ராஜா காட்டம்!
-
“பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” : உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
ஒரு திட்டம் நாட்டிற்காக வரும்போது, அரசியல் செய்யக்கூடாது : விஜய் அறிவிப்புக்கு தங்கம் தென்னரசு எதிர்ப்பு!