Tamilnadu
செலவு கணக்கை ஈடுகட்ட கொரோனா இல்லாதவர்களுக்கு பாசிட்டிவ் முத்திரை: எடப்பாடி அரசின் கொரோனா கொள்ளை அம்பலம்!
கன்னியாகுமரியில் பெண் ஒருவருக்கு சோதனை மேற்கொள்ளாமலேயே கொரோனா இருக்கிறது எனக் கூறி, 2 நாட்களாவது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அகஸ்தீஸ்வரம் அருகே, ஈச்சன்விளை பகுதியைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் கால் வலிக்காக சிகிச்சை பெற அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கு, சர்க்கரை நோய்க்காக ரத்த மாதிரியை சேகரித்துள்ளனர்.
அதில், அப்பெண்ணுக்கு கொரோனா இருக்கிறது என மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அதிர்ச்சியில் அந்த பெண்மணி மயங்கியிருக்கிறார். பின்னர், தனியாரிடம் சளி மாதிரியை கொடுத்து சோதனை மேற்கொண்டதில், கொரோனா தொற்று இல்லையென முடிவு வெளியாகியிருக்கிறது.
இருப்பினும், 2 நாட்களாவது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார மற்றும் காவல்துறையினர் அப்பெண்ணை வற்புறுத்தியிருக்கிறார்கள். வைரஸ் தொற்று இல்லாதபோது, கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு பிற நோயாளிகள் மூலம் தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிடும் என குடும்பத்தினர் அச்சமடைந்து மறுத்திருக்கிறார்கள்.
மேலும், செலவு கணக்கு காட்டுவதற்காக கொரோனா பாதிக்கப்படாதவர்களுக்கு தொற்று இருப்பதாகக் கூறி அரசு நாடகமாடுகிறதா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
Also Read
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!