Tamilnadu

“ஆன்லைன் வகுப்பால் தொடரும் உயிர்பலி” : மன அழுத்தம் காரணமாக 9ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை மேடவாக்கம் புஷ்பாநகர் வினோத் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் இவர் மனைவி சுந்தரி. இவர்களின் முதல் மகன் விக்னேஷ் பொறியியல் படித்து விசாகப்பட்டினத்தில் பணிபுரிகிறார். இரண்டாவது மகன் ஜெய் கார்திக் (வயது-14) செம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 9ம் வகுப்பு படிக்கிறார்.

கொரோனா காரணமாக பள்ளி திறக்காததால் ஆன்லைன் மூலமாக பள்ளி நிர்வாகம் வகுப்பு நடத்திய நிலையில், ஆன்லைனில் பாடம் படித்து வந்த மாணவன் பெற்றோர்களிடமும், சக நண்பர்களிடமும் ஆன்லைன் வகுப்பு பிடிக்கவில்லை என கூறியுள்ளார்,

இந்த நிலையில், நேற்று பிற்பகல் 2.45 மணிவரை ஆன்லைன் வகுப்பில் கார்த்திக் படித்துள்ளார். தாய் சுந்தரிக்கு உடல் நலம் சரியில்லாததால் கணவன் மனைவி இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மாலை 6 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர். அப்போது, கார்த்திக் வீட்டின் வராண்டாவில் சேலையால் மின்விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில், ஆய்வாளர் அழகு தலைமையில் போலிஸார் உடலைக் கைபற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார், மாணவனின் செல்போனை பறிமுதல் செய்து விசாரனை செய்து வருகிறார்கள்.

அந்த முதல்கட்ட விசாரணையில், கார்த்திக் வழக்கமாக நன்றாக படிக்கும் நிலையில் விளையாட்டிலும் ஆர்வமாக பங்கேற்றுள்ளான். ஆனால் ஆன்லைன் வகுப்பு பிடிக்கவில்லை என புலம்பிய அந்த மாணவன் கார்த்திக் நேற்று மாதாந்திர தேர்வு எழுதவுள்ளதாக அவன் பாட்டியிடம் தெரிவித்துள்ளான்.

ஆனால், அங்கு பேப்பர் பந்துபோல் சுருட்டி வீசப்பட்டு கிடந்ததை பார்க்கும் போது ஆன்லைன் தேர்வு எழுதும்போது எதே பிரச்சனை ஏற்பட்டு பேப்பர்களை வீசி இருக்கலாம் என தெரிகிறது என போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Also Read: “ஆன்லைன் பாடம் புரியவில்லை : முதல்வரிடம் பரிசு வென்ற 10ம் வகுப்பு மாணவி தற்கொலை” - சிவகங்கையில் பரிதாபம்!