Tamilnadu
தமிழகத்தில் 5 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.. இன்று 5,693 பேருக்கு வைரஸ் தொற்று.. 74 பேர் பலி! #Corona
தமிழகத்தில் புதிதாக 82 ஆயிரத்து 387 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் மேலும் 5,693 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதில், தமிழகத்திலேயே இருந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே 5,686.
இன்று சென்னையில் 994, கோவையில் 490, சேலத்தில் 309, திருவள்ளூரில் 300, செங்கல்பட்டில் 299, திருப்பூரில் 291, கடலூரில் 251 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரையில் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 8,391 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதில் கடந்த 24 மணிநேரத்தில் 74 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில் இன்று உயிரிழப்பு எண்ணிக்கை அதிகபட்சமாக உள்ளது. அதன்படி சென்னையில் 17ம், சேலத்தில் 10, செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா 6, கோவை, கடலூர், மதுரையில் தலா 4 என பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
அதேசமயத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைக்கு நிகராக கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் உள்ளது. அதன்படி புதிதாக 5,717 பேர் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் இதுவரை 5,02,759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இருப்பினும் 4 லட்சத்து 47 ஆயிரத்து 366 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து தற்போது 47,012 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!