Tamilnadu
நல்லாதான் படிச்சேன்.. ஆனா சீட் கிடைக்கலனா? - நீட் அச்சத்தால் உயிரிழந்த மாணவி ஜோதியின் உருக்கமான கடிதம்!
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தொடர்ந்து மாணவர்கள் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது. நீட் ரத்து கேட்டு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அதனை கருத்தில் கொள்ளாத மத்திய பாஜக அரசு நடத்தியே திருவேன் என கங்கனம் கட்டியுள்ளது.
மத்திய அரசின் இசைவுக்கு ஏற்றபடி மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் அதனை செயல்படுத்தி வருகிறது. அதன்படி நாளை நீட் தேர்வு நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாததால் இந்த ஆண்டு தேர்வுக்காக தயாராகி வந்த மதுரையைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டரின் மகள் ஜோதி ஸ்ரீதுர்கா துக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: “எனக்கு பயமா இருக்குமா” : நீட் தேர்வால் மதுரையில் சப் இன்ஸ்பெக்டர் மகள் தூக்கிட்டு தற்கொலை!
தற்கொலைக்கு முன்பு ஜோதி ஸ்ரீதுர்கா தன் பெற்றோருக்கும், உறவினருக்கும் உருக்கமான கடிதம் எழுதி வீடியோவையும் பதிவிட்டிருக்கிறார்.
அதில், “எல்லாருமே என்கிட்ட ரொம்ப எதிர்ப்பார்த்தீங்க. நல்லாதான் படிச்ச ஆனா பயமாக இருக்கு. ஒரு வேள சீட் கிடைக்கலனா நீங்க எல்லாருமே ஏமாந்துடுவீங்க. நீங்க இதய நோயாளி. என்ன நினைச்சு கவலைப்படாதீங்க அப்பா. அது உங்க ஆரோக்கியத்த பாதிக்கும். தம்பி உங்கள நம்பிதான் இருக்கான். அவன நல்லா பாத்துக்கோங்க. அம்மா, அப்பா ஸ்ரீதர் சோகமா இருக்காதீங்க ப்ளீஸ்.” என ஒவ்வொரு உறவினர் குறித்தும் உருக்கமாக ஜோதி ஸ்ரீதுர்கா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதியின் கடிதம் பின்வருமாறு:
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!