Tamilnadu
நீட் தேர்வால் ஒரே நாளில் 3 உயிர்பலி: தருமபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால் தூக்கிட்டு தற்கொலை!
தருமபுரி அருகே நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மாணவன் ஆதித்யா நீட் குறித்த அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி அருகே இலக்கியம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் - ஜெயசித்ரா தம்பதியினரின் மகனான 20 வயதான ஆதித்யா எனும் மாணவர், நீட் தேர்வுக்காக தயார்படுத்திக் கொண்டிருந்தார்.
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில், மிகுந்த மன அழுத்தத்தாலும், நீட் தேர்வு குறித்த அச்சத்தாலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், மேலும் ஒரு மாணவனின் தற்கொலைச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் மூன்று பேர் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை சுற்றி ரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த எலக்ட்ரிக் கடை உரிமையாளர் முருகேசன் என்பவர் மகன் மோதிலால் (21) என்பவர் நாளை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இன்று அதிகாலை மதுரை தல்லாகுளம் பகுதியில் வசித்த ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட துயரின் சுவடு மறைவதற்குள் மேலும் இரு மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செங்கோடு மோதிலால், தருமபுரி ஆதித்யா, மதுரை ஜோதிஸ்ரீ துர்கா, அரியலூர் விக்னேஷ் என இந்த வாரத்தில் மட்டும் தமிழகத்தில் நான்கு பேர் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மாணவர்களின் உயிர்குடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய பொதுமக்களும், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தீவிரமாக வலியுறுத்தி வரும் நிலையிலும், அ.தி.மு.க அரசின் மெத்தனத்தால் தமிழகத்தில் உயிர் பலி தொடர்வது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!