Tamilnadu
புல்லட்- டியூக் வாகனங்களை மலிவு விலைக்கு விற்ற இளைஞர்கள் : தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது!
சென்னை செம்மஞ்சேரியை சேர்ந்த மணிகண்டன்(24) மற்றும் கோவிந்தன்(22) ஆகிய இருவரை நீலாங்கரை போலிஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் பிரபல இருசக்கர வாகன திருடன் ஸ்டீபன் என்பவனிடம் இருந்து இருசக்கர வாகனங்களை வாங்கி பல பேரிடம் சீசீங் வண்டி, ஆர்.சி புத்தகம் கிடையாது; போலிஸார் கண்டுக்கொள்ள மாட்டார்கள் என கூறி குறைந்த விலையில் வாகனத்தை விற்பனை செய்துள்ளனர்.
இதில், புல்லட் வாகனத்தை 25000க்கும் டியூக்-30, 000 ரூபாய்க்கும், டியோவை 10,000 ரூபாய் என ஆப்பர்களை அள்ளிவிட்டு அப்பாவி மக்களை ஏமாற்றி 5 இருசக்கர வாகனங்களை விற்று வந்துள்ளனர். வாகனத்தை விற்றப் பணத்தை கஞ்சா, மது போதைக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.
சமீபத்தில், தான் நீலாங்கரை போலிஸார் ஸ்டீபனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொரோனா காலகட்டம் என்பதால் வாகன பறிமுதல் செய்ய முடியாமல் போனது. இதனையடுத்து ஸ்டீபனின் உறவினரை பிடித்து இருசக்கர வாகன திருட்டு குறித்து விவரம் கேட்டு நீலாங்கரை போலிஸார் 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
நீலாங்கரை வேளச்சேரி , தாம்பரம், சேலையூர் ஆகிய இடங்களில் திருடிய இருசக்கர வாகனங்களின் பதிவெண்ணை மாற்றி போலியான பதிவெண்ணை போட்டு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
போலிஸார் வாகன உரிமையாளர்களின் விவரங்களை கண்டறிய வட்டார போக்குவரத்து அலுவலக உதவியை நாடியுள்ளனர். கைது செய்த இருவரையும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
Also Read
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னையில் இன்று மழை பெய்யுமா? : வானிலை நிலவரம் என்ன?
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!