Tamilnadu
6,000-ஐ கடந்த கொரோனா: மீண்டும் சென்னைக்கு திரும்பும் பிற மாவட்ட மக்கள்.. டோல்கேட்டில் அலைமோதும் கூட்டம்!
இ-பாஸ் நடைமுறையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தமிழக மக்கள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில், மக்களின் அழுத்ததினாலும், எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலையும் அடுத்து செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் இ-பாஸ் முறையை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் அனைத்து நிறுவனங்களும் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து பணிபுரிவோர் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மூலம் வந்து கொண்டிருக்கின்றனர். இதன்காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் படையெடுப்பு அதிகரித்துள்ளது.
சுங்கச்சாவடிகளில் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், சுங்கச்சாவடி ஊழியர்கள் திக்குமுக்காடி வருகின்றனர். அந்தவகையில், செங்கல்பட்டு, பரனூர் சுங்கச்சாவடிகளிலும் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் வாகன போக்குவரத்தால் ஸ்தம்பித்தது.
கொரோனா அச்சம் காரணமாக சென்னையை விட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் பலரும் மீண்டும் சென்னைக்கே திரும்புவதால், மாநகரம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவும் அச்சம் நிலவுகிறது. ஆகவே வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களையும் கண்காணித்து அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
Also Read
-
ஏன் வெளியே சென்றார்கள் : ஆஸ்திரேலிய வீரர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் - பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு!
-
பீகார் தேர்தல் - பா.ஜ.க ஆசையில் மண்ணைப் போட்டது 'இந்தியா' கூட்டணி : முரசொலி!
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!