Tamilnadu
“இதுதான் மக்களைக் காப்பதா?” - இதயநோயாளி வசிக்கும் வீட்டை பலவந்தமாக தகரம் வைத்து அடைத்த ஊழியர்கள்!
சென்னை குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரத்தில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிப்பில் வசிப்பவருக்கு கடந்த 14 நாட்கள் முன்பு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் பல்லாவரம் நகராட்சி சார்பில் அந்த குடியிருப்பில் இருந்து நபர்கள் வெளியேறாமல் இருக்க தடுப்பு அமைக்க முயன்றபோது அங்குள்ள குடியிப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் வீட்டுக் கதவை முழுவதும் மூடுமாறு தகரத்தை கொண்டு அடைத்துள்ளனர். இதய நோயாளியான முதியவர் உள்ளிட்ட 4 பேர் அங்கு வசிப்பதால் உணவு, அவரச உதவிகளுக்கு சிக்கல் ஏற்படும் எனத் தெரிவித்தும், ஊழியர்கள் ஏற்காமல் முழுவதும் மூடிச் சென்றுள்ளனர்.
இந்தக் காட்சிகள் அங்குள்ளவர்கள் மூலமாக பதிவு செய்யப்பட்டு சமுக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசு செயல்படுவது மக்கள் நலனுக்காகவா அல்லது மக்களின் உயிர் போக்கவா என பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்பட்ட பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுத்துள்ளது.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !