Corona Virus

இன்று ஒரே நாளில் 5,967 பேருக்கு கொரோனா தொற்று... 97 பேர் பலி - சென்னையில் மீண்டும் தீவிரமடையும் பரவல்!

தமிழகத்தில் இன்று 5,967 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,967 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,352 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 70,023 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஒட்டுமொத்தமாக 42 லட்சத்து 76 ஆயிரத்து 640 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,278 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,26,677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை தவிர்த்து, கோவையில் 387 பேருக்கும், கடலூரில் 370 பேருக்கும், திருவள்ளூரில் 320 பேருக்கும், செங்கல்பட்டில் 306 பேருக்கும், சேலத்தில் 273 பேருக்கும் இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று மட்டும் கொரோனாவிலிருந்து குணமடைந்து 6,129 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 456 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 53,282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 97 பேர் உயிரிழந்தனர். அதில், 30 பேர் தனியார் மருத்துவமனையிலும், 67 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 6,614 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories