Tamilnadu

E-Pass பெற்று சென்னை வருவோரை கண்காணித்து தனிமைப்படுத்துக - அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு!

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் போது இ பாஸ் பெரும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளதால் சென்னை நோக்கி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இ பாஸ் பெற்று சென்னை வருவோரை கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், தொழிற்சாலை மற்றும் இதர அலுவல் வேலை காரணமாக வருவோரின் தகவல்களை மண்டல அதிகாரிகள் சேகரிக்க வேண்டும்

அதனை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களுக்கு தெரிவித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களுக்கு தகுந்த நேரத்தில் முறையான நிவாரணங்களை வழங்காமல் அவர்களை சொந்த ஊருக்கும் சென்னைக்கும் அதிமுக அரசு அலையவிடுவது அவர்களின் சுகாதார மற்றும் வாழ்வாதார நலனில் கொண்டுள்ள அக்கறையின்மையை காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Also Read: பள்ளிகளை திறந்தால் வரும் கொரோனா டாஸ்மாக்கை திறந்தால் மட்டும் வராதா?- அதிமுக அரசை விளாசும் சென்னை பெண்கள்!