Tamilnadu

“கொரோனா பலி எண்ணிக்கையில் முரண்: பிணத்திலும் பணம் பார்க்கும் அ.தி.மு.க அரசு” - கடுமையாக சாடிய முத்தரசன்!

நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதத்துக்கும் உட்படுத்தாமல் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு துடிப்பது கண்டனத்துக்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் பேசியதன் விவரம் பின்வருமாறு :

“கொரோனா பாதிப்பு மற்றும் உயிர்ப்பலி எண்ணிக்கையில் முரண்பாடு காட்டும் நிலையில் தமிழக அரசு பணத்தில் மட்டுமில்லை பிணத்திலும் ஊழல் செய்கிறது.

கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் அறிவித்து அறிவிப்பாணையில் 25 லட்சம் என வெளியிட்டுள்ளதன் காரணமாக அரசின் மீது நம்பகத்தன்மை இல்லாமல் போகும்.

இ-பாஸ் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுவதால் அதனை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். பொதுப்போக்குவரத்தை தளர்வுகளுடன் இயக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் கட்சி அலுவலகங்கள் மீதும் தலைவர்கள் மீதும் அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. பதிவிட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்புகள் என்பதால் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துகின்றனர்.

புதிய கல்விக்கொள்கை குறித்து எந்தவித கருத்தும் கேட்காமல், நாடாளுமன்றத்தில் விவாதமும் செய்யாமல் அமல்படுத்தியிருப்பது கண்டனத்துக்குரியது. கொரோனா ஊரடங்கை பயண்படுத்தி பல சட்டங்களை மத்திய அரசு அவசரமாக விவாதமில்லாமல் நிறைவேற்றியிருக்கிறது. அவற்றைத் திரும்ப பெற வேண்டும்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Also Read: நிதி ஒதுக்கியும் முகத்துவாரத்தை தூர்வாராமல் இழுத்தடிப்பு.. காலநிலை மீது பழிபோடும் அதிமுக அரசு..!