Tamilnadu
16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பா.ஜ.க பிரமுகர்; சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சென்னை ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியில் கூலி வேலை செய்து வரும் கணவன் மனைவி வருகின்றனர். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்தச் சிறுமி ஆவடியில் உள்ள தனியார்ப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
அதேபோல கொள்ளுமேடு, செங்குன்றம் சாலையைச் சேர்ந்தவர் 45 வயதான ஆட்டோ ஓட்டுநர் சீனிவாசன். இவர் பா.ஜ.கவை சேர்ந்தவராவார்.
கடந்த 4-ம் தேதி வழக்கம்போல் சிறுமியின் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுள்ளனர். வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருப்பதை அறிந்துகொண்ட சீனிவாசன், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்திருக்கிறார். அவரைப் பார்த்துப் பதறிப்போன சிறுமி கூச்சலிட்டிருக்கிறார்.
அப்போது சிறுமியை அடித்துத் துன்புறுத்திய சீனிவாசன், அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரிடம் இருந்து தப்பிக்க அந்த சிறுமி எவ்வளவோ போராடிப் பார்த்திருக்கிறார். ஆனால், ஈவிரக்கமில்லாமல் 16 வயது சிறுமியைக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த சீனிவாசன், 'நடந்ததை வெளியில் சொன்னால். கொலை செய்துவிடுவேன்' என மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
இதனையடுத்து, வேலைக்குச் சென்ற அவரது பெற்றோர் மாலை வீடு திரும்பியதும், சிறுமி அழுதுகொண்டிருப்பதைப் பார்த்துப் பதறிப்போய் என்ன நடந்தது என விசாரித்துள்ளனர். அப்போது தனக்கு நடந்த கொடுமையைப் பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அளிக்கப்பட்ட தகவலைத் தெரிந்துகொண்ட சீனிவாசன் தலைமறைவாகியுள்ளார்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பா.ஜ.கவைச் சேர்ந்த சீனிவாசன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் அதே பகுதியில் பதுங்கியிருந்த சீனிவாசனைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!