Tamilnadu
மின்வாரிய கேங்மேன் நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு புகார் - லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை துவக்கம்!
மின்சார வாரியத்தில் கேங்மேன் நியமனத்தில் முறைகேடு புகார் பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உடல் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்த பலரை லஞ்சம் வாங்கிக் கொண்டு நியமனம் செய்ததாக புகார் கூறப்படுகிறது. ஆகவே கேங்மேன் பணி நியமன முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ராஜா ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு நேரடி நியமனம் செய்யப்பட்டது.இதில் மின் கம்பங்களில் ஏறுதல், மின் பொருட்களை தூக்கிக்கொண்டு ஓடுவது போன்ற உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்த பலரை சில தொழிற்சங்கங்கள் பணம் பெற்றுக்கொண்டு பணி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கேங்மேன் பதவிக்கு இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 80 சதவீதம் பேர் தகுதியில்லாதவர்களாக உள்ளனர். எனவே, கேங்மேன் பணிக்காக ஆட்கள் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதால் தொடர்புடைய மின்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் மீது சி.பி.ஐ விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.
மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மின்வாரியத்தில் கேங்மேன் நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு புகார் குறித்து இன்று லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கியது.
Also Read
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!
-
“மரியாதையும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது குழந்தைகளின் உரிமை!” : கனிமொழி எம்.பி!
-
கிரிக்கெட் விளையாட்டு : பந்து தலையில் தாக்கி 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம் - காஞ்சியில் அதிர்ச்சி!