Tamilnadu
முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு தினம்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை !
முத்தமிழறிஞர் கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் இரண்டாவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சென்னை அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன், தி.மு.க பொருளாளர் துரை முருகன், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Also Read
-
‘வந்தே மாதரம்’ பாடலை முழுவதும் பாடச்சொல்வது மதவெறியின் உச்ச அக்கிரமம்: தி.க தலைவர் கி.வீரமணி கண்டனம்!
-
“பிரிவினைக்கு இடம் கொடுக்காமல், அன்பு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவோம்!” : வள்ளலார் விழாவில் முதல்வர் உரை!
-
இனி சென்னை மத்திய கைலாஷில் நெரிசல் இல்லை..! - ரூ.60.68 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் திறப்பு!
-
ஈரோட்டில் ‘நொய்யல்’ - இராமநாதபுரத்தில் ‘நாவாய்’ அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல்! : ரூ.68 கோடி ஒதுக்கீடு!
-
ரூ.24.30 கோடியில் ‘கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!