Tamilnadu
பக்கத்து வீட்டு பெண்ணுடன் மோதல் : அநாகரிகமாக நடந்துகொண்ட ஏ.பி.வி.பி தேசிய தலைவர் - வெளிவந்த CCTV காட்சி!
ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி அமைப்பின் தேசிய தலைவராக உள்ள மருத்துவர் சுப்பையா, பக்கத்து வீட்டின் வாசலில் சிறுநீர் கழித்து தொல்லை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நங்கநல்லூர், ராம்நகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி விஜயராகவன் ஆதம்பாக்கம் போலிஸாரிடம் அளித்துள்ள புகார் மனுவில்,
“அடுக்குமாடி குடியிருப்பில் எனது சித்தி வசித்து வருகிறார். இதே குடியிருப்பில் பிரபல மருத்துவர் சுப்பையா வசித்து வருகிறார். இவர் எனது சித்தியிடம் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்த இடம் கேட்டுள்ள்ளார். இதற்கு மாத வாடகை கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்து எனது சித்தி வீட்டின் வாசலில் மருத்துவக் கழிவு குப்பைகளை கொட்டியும் ஒரு நாள் இரவு சிறுநீர் கழித்தும் டாக்டர் சுப்பையா தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இதுதொடர்பாக ஆதம்பாக்கம் போலிஸார், மருத்துவர் சுப்பையாவை விசாரணைக்கு அழைத்தும் அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவர் சுப்பையா மீது ஆதம்பாக்கம் போலிஸார் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் வன்கொடுமைச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பேராசிரியராகவும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் துறைத் தலைவராகவும் பணியாற்றி வரும் மருத்துவர் சுப்பையா, பக்கத்து வீட்டின் வாசல் முன்பு சிறுநீர் கழிப்பது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!