Tamilnadu
இனி சீனாவில் அல்ல; சென்னையில் தயாராகும் ‘ஆப்பிள் ஐபோன் 11’ - விலை குறையுமா?
ஐபோன் 11 மாடல், ஐபோன் XS மேக்ஸ் மாடலை விட ஐந்து மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்கும் பேட்டரியுடன் வருகிறது. ஐபோன்களில் முதன்முறையாக செல்ஃபி கேமராவில் ‘ஸ்லோஃபி’ ஸ்லோ மோஷன் வசதியும் இந்த மாடலில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் 7, ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் எஸ்இ மற்றும் ஐபோன் 6 எஸ் ஆகிய மாடல்களுக்கு பிறகு, ஆப்பிள் அதன் சமீபத்திய மாடல் ஒன்றான ஐபோன் 11-ஐ இந்தியாவில் தயாரிக்கத் தொடங்குகிறது. ஆப்பிளின் டாப்-ஆஃப்-தி-லைன் (top-of-the-line) மாடல் ஐபோன் 11 இப்போது சென்னைக்கு அருகிலுள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 11-ன் உதிரிப் பாகங்கள் ஏற்கனவே கடைகளை எட்டியுள்ளன என்றும், இது மத்திய அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா முயற்சிக்கு ஊக்கமளிக்கிறது என்றும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூரில் உற்பத்தி செய்வதால் ஐபோன் கைபேசிகளை இறக்குமதி செய்வதற்கு செலுத்தவேண்டிய 22 சதவீத வரியை ஆப்பிள் நிறுவனம் சேமிக்கும். இதனால் ஐபோன் விலையில் இப்போதைக்கு மாற்றம் இல்லையெனினும் விரைவில் அதன் விலை குறையும் என எதிர்பார்க்கலாம்.
தற்போதைய நிலையில் ஆப்பிள் ஐபோன் 11 மாடல் விலை இந்தியாவில் நினைவக திறனுக்கேற்ப ரூ.62,900 - ரூ.73,600 என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !