Tamilnadu
“நலிவுற்ற இசைக் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால், தமிழகத்தின் கலைகள் அழிந்துவிடும்” : ஐகோர்ட் வேதனை!
கொரோனா ஊரடங்கின் காரணமாக நலவாரியத்தில் பதிவு பெறாதவர்களுக்கும் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கும் சேர்த்து நிவாரணம் வழங்க வேண்டும் என கட்டுமான தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு மனிதநேய அடிப்படையில் குறைந்தபட்ச நிவாரணமாக ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், நலவாரியத்தில் புதுப்பிக்கத் தவறியவர்கள் மற்றும் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோவில்கள் மூடப்பட்டுள்ளதாலும், திருமண நிகழ்வுகள் நடைபெறாத காரணத்தாலும் நாதஸ்வரம், தவில் வித்வான்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி நிலுவையில் உள்ள வேறொரு வழக்கை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஏற்கனவே நலிந்த கலைஞர்களாகக் கருதப்படும் இவர்கள் இந்த பேரிடர் காலத்தில் மிகப்பெரிய பொருளாதார பிரச்னைகளை சந்தித்து வருவதாக கருத்து தெரிவித்தனர்.
மேலும், நடைமுறைச் சிக்கல்களை மட்டுமே காரணம் காட்டி இதுபோன்ற நலிந்த கலைஞர்களான நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால், தமிழகத்தில் இருக்கும் பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும் என வேதனை தெரிவித்தனர். பின்னர், அரசு தலைமை வழக்கறிஞரின் வாதத்திற்காக விசாரணையை ஜூலை 28 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!