Tamilnadu
இன்று மட்டும் தமிழகத்தில் 44 பேர் கொரோனாவுக்கு பலி; 1843 பேர் புதிதாக பாதிப்பு- ‘அபாய’கட்டத்தில் சென்னை!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று வரை தமிழகத்தில் மொத்தம் 46,504 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 54 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இன்று வரை தமிழகத்தில் மொத்தம் 46,504 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மட்டும் 18,403 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று வரை தமிழகத்தில் 7,29,002 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 44 பேர் பலியாகியுள்ளனர். இதில் 32 பேர் அரசு மருத்துவமனையிலும், 12 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று மட்டுமே 1,257 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,244 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 797 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 25,344 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 20,678 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Also Read
-
டம்மியின் இடைத்தேர்தல் பிரச்சார ஸ்கிரிப்ட் ரெடியா virtual abusers? : DMK IT WING கேள்வி!
-
மர்ம காய்ச்சலால் 1 வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!
-
காலை உணவுத் திட்டம் : பல்லி விழுந்த சாப்பாடு.. தவெக அரசின் அலட்சியத்தால் 40 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!
-
‘துரோகியே வெளியில் போ‘... தலைதெறிக்க ஓடும் த.வெ.க. வேட்பாளர்கள் : முரசொலி தலையங்கம்!
-
போராட்டம் ஒரு புறம் - ரீல்சிற்காக ஆய்வு மறுபுறம்! : மின்வெட்டிற்கான தீர்வை தட்டிக்கழிக்கிறதா த.வெ.க?