Tamilnadu

“தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாகிறதா தமிழ்நாடு?” : நான்கு நாட்கள் நான்கு படுகொலைகள்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, ஊரடங்கு காலத்தில் ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான நடத்தப்படும் தாக்குதலும் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நான்கு நாட்களில் 4 தலித் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, மதுரையைச் சேர்ந்த எவிடன்ஸ் கதிர் கூறுகையில், இந்த ஊரடங்கைப் பயன்படுத்தி 30க்கும் மேற்பட்ட சாதி அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள் தமிழகத்தில் நிகழ்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக கூறிய எவிடன்ஸ் கதிர், “சாதி வன்முறை அதிகம் நடந்துவருகிறது. குழுக்களில் 40 - 50 பேர் தாக்குகின்றன. இது பூட்டுதலில் எப்படி சாத்தியமானது? கடந்த நான்கு நாட்களில் நான்கு தலித்துகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மரியாதைக் கொலைகள், குழு தாக்குதல்கள், கற்பழிப்பு மற்றும் துன்புறுத்தல் என அனைத்தும் நடந்துள்ளன.

இந்த ஊரடங்கில் தாக்குதல் நடத்தினால், பாதிக்கப்பட்டவர்களால் முறையாக புகார் செய்யக்கூட முடியாது. அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸ் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் இப்போது கூறியுள்ளது. இப்போது ஆதிக்க சாதியினர் இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஜாமீனுக்காக நகர்கின்றனர். இது குறித்து அரசாங்கம் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

4 பேர் கொலை விவரம்:

ஆரணியில் உள்ள மொரப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த எம்.சுதாகர் மார்ச் 29 அன்று கொலை செய்யப்பட்டார். சுதாகர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். மாற்று சாதி பெண்ணை காதலித்ததால் சுதாகர் கொலை செய்யபட்டார். இந்த கொலை வழங்கில் பெண்ணின் தந்தை உட்பட இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுதாகர்

மே 8 ஆம் தேதி மட்டும் மூன்று தலித்துகள் கொலை செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் உள்ள உதயகுளம் கிராமத்தில் இருவர். தூத்துக்குடியில் ரூ.40,000 கடனுக்காக வழங்கப்பட்ட சொத்து பத்திரத்தை திருப்பி தருவதில் ஏற்பட்ட பிரச்னையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த மாமனார், மருமகன் 2 பேர்களை ஆதிக்கசாதியைச் சேர்ந்த ஒருவர் வெட்டி படுகொலை செய்துள்ளார்.

மேலும் சேலத்தில் மே 9 ம் தேதி குடிபோதையில் வேகமாக வந்த இளைஞர்களை தட்டிக்கேட்ட தலித் சமூதாயத்தைச் சேர்ந்த விஷ்ணுபிரியன் என்ற என்ஜினீயர் உயர் சாதிக் குழுக்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார் .

கொரோனா ஊரடங்கு நேரத்தில் கொலைகள் மட்டுமின்றி சமூக புறக்கணிப்பும் நடந்துள்ளது. நிலகோட்டையில் ஆதிக்க சாதியினர், தலித்துகள் சமூகத்தினரை பொதுக்கழிப்பிடம் மற்றும் குழாய்களை பயன்படுத்தக்கூடாது என புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “குடிபோதையில் தகராறு” : ஒன்றாக சுற்றிய நண்பனைக் கொன்ற இளைஞர் - உயிரைப் பறித்த டாஸ்மாக் திறப்பு!