Tamilnadu
தினந்தினம் உச்சத்தைத் தொடும் கொரோனா பரவல் : தமிழகத்தில் 20,000-ஐ கடந்தது பாதிப்பு... 154 பேர் பலி!
தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 20,246 ஆகவும், பலி எண்ணிக்கை 154 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :
“தமிழகத்தில் இன்று மேலும் 874 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 733 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், 141 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இதனால் மொத்த பாதிப்பு 20,246 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் சென்னையில் 7 பேரும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா ஒருவரும் என 9 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 71 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 11,334 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மேலும் 618 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 765 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 11,313 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 8,776 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!