Tamilnadu
2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை - அ.தி.மு.க பிரமுகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!
பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. சமூகத்தில் செல்வாக்கு மிகுந்தவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பித்து விடலாம் எனும் எண்ணத்தில் இதுபோன்ற கொடூரங்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சி அ.தி.மு.க பொருளாளர் கணேசன் (61). இவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது பெண் குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை செய்ததாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
குழந்தையின் பெற்றோர் போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் அ.தி.மு.க பிரமுகர் கணேசன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!