Tamilnadu
டாஸ்மாக் திறக்க அவசர வழக்குக் கோரிய அதிமுக அரசு.. நிவாரண நிதி கேட்ட வழக்கில் ஆஜராக மறுப்பு!
பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனிடையே பல ஆண்டுகளாக பணி இல்லாமல் இருக்கும் தங்களுக்கும் அரசு கொரோனா நிதி உதவி வழங்க உத்தரவிட வேண்டும் என்று இரு வாரங்களுக்கு முன் மக்கள் நலப்பணியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரிக்க தமிழக அரசு தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜூன் முதல் வாரத்தில் வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில் அதனை ஒத்திவைக்கக் கோரி தமிழக அரசின் வழக்கறிஞர் வினோத் கன்னா உச்ச நீதிமன்ற பதிவாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், காணொளிக் காட்சி மூலம் வாதிட இணைய வசதி தன்னிடம் இல்லாததால் வழக்கை தற்போது விசாரணைக்கு பட்டியலிடக்கூடாது. உச்ச நீதிமன்றம் தனது வழக்கமான பணியை தொடங்கிய பின்னர் வழக்கை விசாரிக்கலாம் என தமிழக அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
டாஸ்மாக் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மறுநாளே உச்ச நீதிமன்றம் சென்று அவசர வழக்காக விசாரிக்க வைத்த தமிழக அரசு, கொரோனா நிதி உதவி கேட்கும் வழக்கை விசாரிக்க கூடாது என்று கேட்பது மக்கள் நலப்பணியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!