Tamilnadu
“குடும்ப அட்டை இல்லாதோருக்கும் அத்தியாவசிய பொருட்களை வழங்குக” - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமானத் தொழிலாளர்கள், தினக்கூலிகள், வெளி மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு தமிழகத்தில் குடும்ப அட்டைகள் இருக்காது என்பதால், அவர்களின் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகளின் அடிப்படையில், உணவு தானியங்களை விநியோகிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி அருள் அரசு என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், குடும்ப அட்டை இல்லாத அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கியுள்ளதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையின்படி யாருக்கும் இவர்கள் வழங்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழகத்தில் குடும்ப அட்டை இல்லாத நபர்களை உடனடியாக கணக்கெடுத்து அவர்களுக்கு உதவி வழங்கியது தொடர்பாக நீதிமன்றத்தில் வரும் மே 20ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!